Tuesday, November 1, 2011

செ‌வ்வா‌ய் தோஷ‌ம்! சரியான விளக்கம்!


 நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு  இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.

ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.

உதாரமாக பாலின உறுப்புகளுக்கு  அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும்.  காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம்
வேறுநபரை நாடாது.  கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். . இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது. அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில்
இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.

செவ்வாய் ராகு சேர்கையில் மோசமான சூழ்நிலையில் பிற்நதிருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது. செவ்வாயுடன் சூரியன்  குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை  அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது  செவ்வாய்தான்
செவ்வாய்தோஷம் சரியான விளக்கம்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய்_தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் எந்தந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் ஏற்படும்?
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை?
செவ்வாய்தோஷ பரிகாரம் செய்யவேண்டிய காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யக்கூடாத காலம் எது?
செவ்வாய்தோஷ பரிகாரங்கள் யாவை?
செவ்வாய் தோஷ வழிபாட்டு முறைகள்